Kamal knows that he is acting in Indian 2. Do you know how many languages are released?

கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இந்தியன்.

சங்கர் இயக்கிய இந்தப் படம் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கதை அம்சம் கொண்டது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த படம் இன்றைய அரசியலைப் பற்றியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், கமல் தற்போது இருக்கும் அரசில் நடக்கும் ஊழலுக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில் இந்தியன் படம் என்ன மெசஜ் சொல்லப்போகுதோ? என்றும் கட்டாயம் அரசியல் இருக்கும் என்றும் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.