Asianet News TamilAsianet News Tamil

சத்தமே இல்லாமல் கோடிகளை குவிக்கும் கமல் படம்... ‘விக்ரம்’ டப்பிங் ரைட்ஸ் விற்பனை மட்டும் இவ்வளவா?

இந்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின

Kamal hassan vikram movie hindi rights sales make bench mark in kollywood
Author
Chennai, First Published Jul 30, 2021, 6:58 PM IST

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த 16ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங்கின் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில்  இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் அரசியல் பணிகளில் பிசியாக இருந்ததாலும், கொரோனா பேரிடர் காரணமாகவும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

Kamal hassan vikram movie hindi rights sales make bench mark in kollywood

அதற்கு முன்னதாக படம் தொடங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக கடந்த வாரம் ஜூலை 10ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல் நீண்ட இடைவெளைக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஒரு மாணவன் போல் உணர்கிறேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார். தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வரும் நிலையில், அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். 

Kamal hassan vikram movie hindi rights sales make bench mark in kollywood

சமீபத்தில் இந்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழ் திரைப்படம் இதுவரை செய்யாத சாதனையை கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சத்தமே இல்லாமல் செய்து முடித்துள்ளது. அதாவது விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமம் மட்டும் ரூ.35கோடி முதல் ரூ.40கோடி வரையில் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய்சேதுபதி,ஃபகத் பாசில் என பிரம்மாண்ட கூட்டணியுடன் படம் உருவாகியுள்ளதால் இந்தி ரைட்ஸ் உரிமையின் விலை எகிறியதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios