kamal hassan twitter about national anthem

எனது தேசப்பற்றை சோதிப்பதற்காக எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச்சொல்லி கட்டாயப் படுத்தக்கூடாது என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு , திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார். அதில் சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பலாம் என கூறியுள்ளார்.

எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.