இதுவரை அரசியலில் நடக்காத திருப்புமுனையை நேற்று இரவு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிகழ்த்தினார். முதலமைச்சராக இருந்தும் பல அவமானங்களை சந்தித்து வந்த அவர் முதல் முறையாக சசிகலாவிற்கு எதிராக மௌனம் கலைத்தார்.

இந்த காட்சியை நேரில் காண முடியாத பலர், விடிய விடிய தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பேசுவதை தூங்காமல் கூட பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதே போல இதனை பார்த்த நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அந்த ட்விட்டில் கூறியிருப்பதாவது 'நிம்மதியாய் தூங்கு தமிழகமே, அவர்கள் நமக்கு முன்பாக முழித்துவிடுவார்கள்'.

ஆனால் அவர் யாரை குறிப்பிட்டு இப்படி ஒரு பதிவை பதிவிட்டார் என பலரும் குழம்பி வருகின்றனர்.