அஜித்குமார் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விவேகம் திரைப்படம் நன்றாக இருப்பதாகவும், படம் குறித்து நல்ல சேதி கேள்விப்படுவதாகவும் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விவேகம் திரைப்படம் இன்று வெளியாவதால்  சினிமா பிரபலங்கள்  பலர் அஜித்தின் 'விவேகம்' வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'சென்னையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்துக்கு  மத்தியில்  'விவேகம்' படத்தைப் பார்க்கப்போகிறேன்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல் தனது டுவிட்டரில் அக்ஷரா ஹாசனுடன் படம் பார்த்து வருகின்றேன் நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2017

விவேகம் படத்தில் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் நடித்துள்ளார்.