கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நேற்று அதிகாலை காவி நிறம் சாயப் பூசப்பட்டிருந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற 21 வயது இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

பல தரப்பு மக்களையும் கொந்தளிக்க வைத்த இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம்தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.