இன்றைக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த், திரையுலகில் அடிவைத்து 45 ஆண்டுகள் ஆகின்றன. இதை கொண்டாடும் விதமாக இரு  னங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவே திண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினர். ரஜினிகாந்த் அவரது திரையுலக வாழ்க்கையில் 45 ஆண்டுகளை முடித்துள்ள நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு டுவீட் செய்திருந்தார் ரஜினிகாந்த். அந்த டுவீட்டில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என்று பதிவிட்டிருந்தார். 

அதேபோல் உலக நாயகன் கமல் ஹாசனும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து 61 வருடங்கள் ஆகிறது. அதை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2019ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த சிம்பா என்ற படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீநாத் வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் இடம் பெற்ற “போட்டா படியுது” பாடலை மறு உருவாக்கம் செய்திருந்தார். அதில் இளைஞர்கள் சிலர் ஆட்டோவில் ஏறி தொங்கிய படி பாடுவது போல் அந்த காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் சார் 61 வருடங்கள் நிறைவு செய்வதை வாழ்த்துவதில் நான் அதிக மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறேன். 1987ல் வெளிவந்த சத்யா படத்தின் போட்டா படியுது பாடலின் location-based கவர் பாடல் 'ரெபல் ஆந்தம்' ளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன். இந்த பாடலை உருமாகியது சிம்பா அரவிந்த் ஸ்ரீதர்" என பதிவிட்டிருந்தார். 

இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல, மாறா அன்பு. இதற்கு பதில்பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான்” என உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார்.