kamal hassan talk about her library
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கடந்த சில மாதங்களாக பல சோதனைகள் அவரை வாட்டி வதைத்து வருகிறது, கௌதமியில் பிரிவில் ஆரம்பித்து கால் முறிவு, அண்ணனின் மரணம் தற்போது அவர் வீட்டில் ஏற்பட்டுள்ள தீ என பல சோகமான நிகழ்வுகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது புதிய வீடும் அதற்கு அருகில் தயாரிப்பு ஸ்டுடியோ ஒன்றும் கட்டி வருகிறார்.
இந்த கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் தனக்கு ஆண்டு ஒன்றுக்கு 600 மணி நேரம் மிச்சமாகும் என்றும், அதனை பயனுள்ள வழியில் கழிக்க முற்படுவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் கமல்ஹாசன் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் அவர் பொக்கிஷம் போல் சேர்த்து வைத்திருந்த விலைமதிப்பில்லாத புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளது அவர் மனதை அதிகளவு வருத்தமடைய செய்துள்ளதாம்.
தீயில் எரிந்த நூல்களில் மறைந்த பிரபல எழுத்தாளர்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இனி அவற்றை பணம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
