தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியுள்ளது.

இமானின் இசையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மோஷன் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது.இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படம் குறித்து சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி வந்தன.

விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும்,  அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

முதலில் கமல் ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் தான் முடிவு செய்தார். நான் நடிக்காவிட்டாலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்து போக, ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் மார்ச் மாதம் 5ம் தேதி தலைவர் 169 படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவின. அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் இணையும் அந்த தினம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.