சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் ரஜினியுடன் 90ஸ்-களில் ஜோடி போட்ட குஷ்பூ, மீனா மட்டுமல்லாது கரண்ட் டிரெண்டில் உள்ள கீர்த்தி சுரேஷ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே உலக நாயகன் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த படத்தை தற்போது விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அந்த கதையை கேட்ட ரஜினிகாந்த் ஓ.கே.சொன்னதாகவும் தகவல்கள் அடுத்தடுத்து பரவின.இது அனைத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் இணைய உள்ள புதிய படத்திற்கான பூஜை மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளதாக கூட சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை ராஜ்கமல் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

முதலில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையில் சில மாறுதல்களை சூப்பர் ஸ்டார் கூறியுள்ளார். இதையடுத்து மாஸ்டர் ஷூட்டிங்கை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் கதையில் சில மாறுதல்களை செய்து, ரஜினிகாந்திடம் மீண்டும் கதையை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அதில் தலைவருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் அந்த படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

அதே சமயத்தில் ரஜினிகாந்திற்கு சொன்ன கதையை கேட்ட கமல் ஹாசனுக்கு அது பிடித்துவிட்டதாம். அதனால் தானே இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசனிடம் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அதனால் படத்தில் மட்டுமல்ல இருவரது நட்பிலும் விரிசல் விழுந்துவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தை டிராப் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சூப்பர் ஸ்டாரை இயக்க போகிறோம் என்ற லோகேஷ் கனகராஜின் கனவு கலைந்துவிட்டது.