தமிழ் திரையுலக நடிகர்களில் சற்று வித்தியாசமாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிக்கும் படங்களும் சற்று வித்யாசமானவைகளாகவே இருக்கும்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து இவர் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து மக்களுடைய கருத்துக்களையும் தெரிந்து கொண்டு வருகிறார்.
மேலும் பலர் இவர் தினமும் என்ன ட்விட் செய்வார் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.அந்த விதத்தில் தற்போது
எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு' என்றும்
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. என்றும் ட்வீட் செய்துள்ளார்.
