விஜய் நடிப்பில் “மாஸ்டர்” படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும், அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. முதலில் கமல் ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் தான் முடிவு செய்தார் என்றும், அதில் நடிக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருவதால், அந்த கேப்பில் கமல் ஹாசனை வைத்து ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நேற்று முன்தினம் தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்போவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று கமல் ஹாசனை வைத்து தான் இயக்க உள்ள “எவனென்று நினைத்தாய்” பட போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். 

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

அதில், துப்பாக்கியால் வடிவமைக்கப்பட்ட கமல் முகம் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி போஸ்டரில் "Once upon a time there lived a ghost" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டிசைனை நன்றாக உற்று பார்த்தால் ஜி என்பது போல் தெரிந்தது. கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’,‘இந்தியன் 2’ படத்தை தொடர்ந்து இருவருடனும் மீண்டும் அனிருத் இணைகிறார். 

 

இதையும் படிங்க: என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

கமல் ஹாசனின் 232வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த படத்தின் போஸ்டர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான மெக்கானிக் படத்தில் இருந்தது காப்பியடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு போஸ்டர்களையும் ஒன்றாக வைத்து நெட்டிசன்கள் வேற லெவலுக்கு வைரலாக்கி வருகின்றனர். இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய “மாஸ்டர்” படத்தில் 3 போஸ்டர்களுக்கும் இதே காப்பி பஞ்சாயத்து வந்தது குறிப்பிடத்தக்கது.