நடிகர் கமல்ஹாசன்,நடிகை கௌதமியின் பிரிவில் இருந்து மீண்டும்.... காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு நலமாகியும் தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். 

மேலும் இவர் அவ்வபோது தன் ரசிகர்களுக்காக டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை தெரிவிப்பார்.

ஆனால் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் குறித்து கமல் பெயரில் சில கருத்துக்கள் வந்தது, இதை கமல் தான் சொல்கிறார் என பலரு ஷேர் செய்தனர்.

ஆனால் கமல் தற்போது 'சபாஷ் நாயுடு ' படப்பிடிப்பில் உள்ளதால் இது சாத்தியம் இல்லை என கமலின் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

தற்போது அது பற்றி தீவிரமாக விசாரித்த போதுதான் தெரியவந்துள்ளது அது போலி ஐடி என்று.

அந்த ஐடியிலிருந்து தொடர்ந்து கமல் கூறுவது போல் ஒரு சில கருத்துக்கள் வந்துக்கொண்டே இருக்கிறது, இதை யாராவது கவணித்து ஏதேனும் உடனே ஒரு முடிவு எடுப்பது நல்லது என கமல் ரசிகர்கள் வலை தலத்தில் கூறியுள்ளனர்.