இளம் தலைமுறையினர் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் அம்மா, பாட்டி வரை அனைவரையும் ரசிக்க வைத்த நிகழ்ச்சி பிக்பாஸ் . இந்தியில் 13 சீசனை தொடர்ந்து 14வது சீசனில் காலடி பதித்துள்ள இந்த நிகழ்ச்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்காக சீசன் 4 ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. முந்திக்கொண்டு தெலுங்கு பிக்பாஸ் சீசனுக்கான புரோமோ வீடியோ வெளியாக. அதனால் தமிழ் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். 

தமிழ் ரசிகர்களை குஷியாக்கும் வகையில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் 4 புரோமோ வீடியோவும் வெளியானது. ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிய கமல் ஹாசன் பிக்பாஸ் 4 தொடங்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், லாக்டவுனால் வேலை இல்லாமல் இருப்பவர்களை உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை பயன்படுத்தி வேலைக்கு செல்லுங்கள் என கூறியுள்ள கமல்.. இதோ நான் வேலைக்கு வந்துட்டேன்... வேலையை  ஆரம்பிக்கலாமா? என அவர் பாணிலேயே பேசி முதல் வீடியோ பரவசப்படுத்தியது. 

தற்போது அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை ஷிவானி நாராயணன், ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், கிரண், அதுல்யா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, டிக்டாக் இலக்கியா, வித்யுலேகா ராமன், குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் கலக்கப் போவது யாரு, அது இது எது புகழ் காமெடி நடிகர்  அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. 

 

இதையும் படிங்க: கொரோனா குணமான குஷியில் காதலருடன் டூர் கிளம்பிட்டாரோ?.... ஏர்போர்ட்டில் ஜோடியாக உலவும் நிக்கி கல்ராணி - ஆதி!

மேலும் அக்டோபர் 4ம் தேதி போட்டியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு அடுத்த நாளான திங்கள்கிழமை முதல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டது. இந்த வார இறுதியில் பிக்பாஸ் சீசன் 4-க்கான புதிய புரோமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசத்தலான 2வது புரோமோவும் வெளியாகியுள்ளது. போன புரோமோவில் முழுக்க முழுக்க கமல் ஹாசன் மட்டுமே பேசியிருப்பார். ஆனால் புதிய புரோமோ மக்களின் மனம் கவர்ந்த பிக்பாஸின் குரலில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ...