கொரோனா பிரச்சனை காரணமாக மே 3ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள. இதனால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பிரபலங்கள் பலரும் ஆன்லைன் லைவ் மூலமாக பேட்டியளித்து வருகின்றனர். குரூப் கால் செய்து பிரபலங்கள் அனைவரும் ஒன்றே நேரத்தில் பேசி மகிழ்கின்றனர். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.அதில் கமல் ஹாசன் விஜய் சேதுபதியை தெலுங்கர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!

அந்த நேரலையில் விஜய் சேதுபதி கமல் ஹாசனின் திரைப் பயணம், படங்களை தேர்வு செய்யும்  விதம், துணிச்சலான தயாரிப்பு முடிவுகள், அரசியல் வருகை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். கமல் சார் படங்களில் ஒரு காமெடியை பார்த்து நான் ரசிப்பதற்குள் ஐந்து, ஆறு காமெடி சீன்கள் கடந்து போய்விடுகிறது.... பேச்சு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

நான் சொல்வது புரிய போய் தானே அதை திரும்ப, திரும்ப பார்க்கிறார்கள்... இரண்டு ஜோக் மிஸ் ஆகிடுச்சின்னு அந்த படத்தை நீங்கள் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்கிறேன் அவ்வளவு தான். இல்லை என்றால் ஒருமுறை பார்த்துவிட்டு கடந்து போய்விட கூடாது இல்லையா?... கலைஞரோ, ஒளவையாரோ, பாரதியாரோ புரிய வேண்டும் என்று ஏங்கி கொண்டிருந்தார்கள் என்றால் அவர்கள் வெறும் சினிமா பாடல் மட்டும் தான் எழுதியிருப்பார்கள்.... 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

பாரதியாரின்  காற்று வெளியிடை கண்ணம்மா பாடலை சுட்டிக்காட்டிய கமல் ஹாசன், அவரிடம் போய் இதற்கெல்லாம் அர்த்தம் கேட்டால் பாரதியே இல்லை அது, டர்பன் கழட்டு போய்ச்சின்னு அர்த்தம்.... நான் இப்படித்தான் அதை புரிந்து கொள்வார்கள். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்... உங்களுக்கும் புரியும்... புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டு போகிறேன் என்று பளீச்சென்று பேசி, விஜய் சேதுபதி ஒரு தெலுங்கர் அவர் தமிழரே இல்லை என்பதை வெளிச்சம் போட்டி காட்டிவிட்டார் கமல் ஹாசன். அவர் சொன்னதில் தமிழர்களுக்கு நான் பேசுவது புரியும், நீ தான் தமிழனே இல்லையே அப்புறம் எப்படி புரியும் என்ற பொருளும் அடங்கியுள்ளதை கமலின் பேச்சை கேட்டால் தெரிகிறது.