மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில், பல அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் , திரைபிரபலங்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிலும் நடிகர்களை பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், நடிகர் அஜித் கூட இன்று காலை அவரது உடல் புதைக்க பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் பலரும் நடிகர் கமல் வருவார் என எதிர் பார்த்த போதும் அவர் வராதது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே போல் இன்று காலமான மூத்த பத்திரிகையாளர் மற்றும் மூத்த நடிகர் சோ வின் அஞ்சலிக்கு நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார், அஜித், சூர்யா என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அனால் நடிகர் கமல் மட்டும் வராதது மேலும் பலருக்கு அவர் மேல் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டர் போன்ற சமூக வலயத்தளங்களில் மட்டுமே இதுவரை தனது இரங்கல்களை தெரிவித்து வரும் கமல் ஏன் இது போல் முக்கிய நிகழ்வுகளை தவிர்க்கிறார் என காரணம் தெரிய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.