kamal hassan compare big boss and bahubali

பாலிவுட்டில் 10 பகுதிகளை கடந்து தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர் இது பாலிவுட் பிரபலங்கள் கலாச்சாரத்திற்கு ஒத்துபோகலாம் ஆனால் நம் நாடு கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாது என சில போராட்டங்களையும் நடத்திவிட்டனர்.

இது குறித்து பேசிய கமலஹாசன், இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 4 கோடி ரசிகர்களை ஈர்த்துள்ளது என பெருமிதத்தோடு கூறினார். மேலும் இது சிலருக்கு பிடிக்காமல் போகலாம்... அவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு பிடித்திருக்கிறதா இல்லையா என கருத்து சொல்லுங்கள்.

ஒரு வேலை ஒரு முறை பார்த்து பிடிக்காதவர்கள் மீண்டும் பாருங்கள், பார்க்க பார்க்க கூட இது பிடித்து போகலாம் என கூறினார்.

மேலும் பாகுபலி திரைப்படம் வெளியானபோது பலராலும் ரசித்து பார்க்கப்பட்டது, ஒரு சிலர் இதில் அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்த பட்டுள்ளதால் சில இயக்குனர்களே இந்த படத்தை பிடிக்கவில்லை என கூறினார்கள்.

ஆனால் இது வரை உலகில் உள்ள பலரால், அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் பாகுபலி என்பது குறிப்பிடத்தக்கது... அதே போல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியும் என கூறி அதுவும் பி பி... இதுவும் பி பி என ஒப்பிட்டு கூறினார்.