Vikram Trailer : அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது. 

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விக்ரம். கமல் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

விக்ரம் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தை புரமோட் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ரெயில் இஞ்ஜினில் விக்ரம் படத்தின் போஸ்டர் இடம்பெற்றிருந்த வீடியோ வெளியாகி வைரலானது. அதேபோல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் வருகிற மே 18-ந் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளார்களாம். பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது இதுவே முதன்முறை. 

இதையும் படியுங்கள்... Ajith vs Vijay : அஜித் - விஜய் இடையே மீண்டும் மோதல் - வெற்றி வாகை சூடப்போவது யார்?

Scroll to load tweet…