Ajith vs Vijay : அஜித் - விஜய் இடையே மீண்டும் மோதல் - வெற்றி வாகை சூடப்போவது யார்?
Ajith vs Vijay : அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான வலிமை திரைப்படம் வருகிற மே 1-ந் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

அஜித்தும், விஜய்யும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அஜித் - விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் எலியும், பூனையுமாக சண்டையிட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இருதரப்பு ரசிகர்களின் டுவிட்டர் மோதல்களே அதற்கு சாட்சி.
இந்த மோதல்கள் படங்களிலும் தொடர்ந்து வருகின்றன. பெரும்பாலும் அஜித் - விஜய் படங்கள் ஒன்றாக வெளியிடப்படுவதில்லை. அது ஒரு அறிதான நிகழ்வாகவே உள்ளது. கடைசியாக விஜய் நடித்த ஜில்லா படமும், அஜித் நடித்த வீரம் படமும் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகின. இந்த போட்டியில் இரண்டு படங்களுமே வெற்றி வாகை சூடின. அதன்பின் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீசானது இல்லை.
அதேபோல் தொலைக்காட்சிகளிலும் அஜித் - விஜய் படங்கள் போட்டிபோட்டுக் கொண்டு ஒளிபரப்பப்படுகின்றன. இவ்வாறு ஒளிபரப்பப்படும் படங்களில் எந்த படம் அதிக அளவில் டிஆர்பி-யை பெறுகிறது என்பதை அறிவித்து இருதரப்பு ரசிகர்களும் மார்தட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான வலிமை திரைப்படம் வருகிற மே 1-ந் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. அஜித்தின் பிறந்தநாளன்று அப்படம் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை ஒளிபரப்பப்பட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர். இதில் அதிக டிஆர்பி-யை பெற்று யார் வெற்றி வாகை சூடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Kangana Ranaut Sexually Assaulted : சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் - பகீர் கிளப்பிய கங்கனா ரனாவத்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.