Lokesh kanagaraj : இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஹாட்ரிக் ஹிட்
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். மேலும் நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்ரம் ரெடி
சர்கார் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ட்ண்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றி உள்ளனர். கமலின் ராஜ்மகல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூன் 3-ல் ரிலீஸ்
மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் இப்படத்தை முதலில் ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பின்னர் படப்பிடிப்பு பணிகள் தாமதமானதால் ரிலீஸ் தேதியையும் மாற்றி உள்ளனர். அதன்படி இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கமல் வாழ்த்து
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் அவரை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ரசிகராகத் தொடங்கி... இயக்குனராக வளர்ந்து... இன்று சகோதரராக மாறியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Vikram movie release date : ஆரம்பிக்கலாங்களா... மாஸான கிளிம்ப்ஸ் உடன் ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
