’கலைஞன்’ படத்தில் கமலுடன் ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?’ என்று பாடிப்பறந்து சென்ற பிந்தியாவை நினைவிருக்கிறதா? முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரின் முன்னாள் மனைவி என்று சொன்னால் புரிந்துகொள்ள இன்னும் கொஞ்சம் இலகுவாக இருக்கும்.

தற்போது டெல்லியில் வசிக்கும் அவரது காரை நேற்று இரவு சில ரவுடிகள் வழிமறிக்க, அவரோ காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றிருக்கிறார். ஆனால் ரவுடிகள் அவரை விடுவதாய் இல்லை. சில கிலோ மீட்டர் தூரங்களுக்கு ஃபாலோ செய்த அவர்கள் ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அவரது கார் கண்ணாடியை உடைத்து கைப்பையையும், அவரது செல்போன்களையும் பறித்துக்கொண்டு பறந்தனர்.

அவர்களை பர்ஹீன் தடுத்து நிறுத்த உதவிக்கு ஆட்களை அழைத்தார். உடனே அவர்கள் பர்ஹீனை சரமாரியாக அடித்து தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். பர்ஹீன் ரோட்டில் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்த ராணுவ வீரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா உதவியோடு தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் சிக்னலில் காரை நிறுத்துபவர்கள் கவனத்தை திருப்பி கொள்ளையடிக்கும் ‘தக் தக்’ கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தெற்கு டெல்லி போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.