‘பிக்பாஸ்’நிகழ்ச்சியின் பிசி ஷெட்யூல்களுக்கு மத்தியில் இரண்டு படங்களை நடித்து முடித்துக்கொடுக்கவேண்டியிருப்பதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்சிப் பஞ்சாயத்துகள் எதுவும் தன் கவனத்துக்கு வரக்கூடாது என்று முடிவெடுத்திருக்கும் கமல் நாளை தமிழகம் முழுக்க உள்ள நிர்வாகிகளை அழைத்து அவசரக் கூட்டம் நடத்துகிறார்.

இது தொடர்பாக சற்றுமுன்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில்,...நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் வருகின்ற வெள்ளிக்கிழமை [26.07.19] அன்று காலை 11 மணி அளவில் கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் குறித்த  அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் நமது கட்சியின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம் ஓட்டல் ராஜ்பார்க், ஆழ்வார்ப்பேட்டை.... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘இந்தியன் 2’படப்பிடிப்புக்குக் கிளம்பும் கமல் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’க்கும் கதை விவாதத்தில் ஈடுபட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். அதனால் கட்சி தொடர்பான தலைவலிகளை தனது கவனத்துக்குக் கொண்டுவரக்கூடாது என்று அறிவிக்கவே இந்த அவசரக்கூட்டம் கூட்டுவதாகத் தெரிகிறது.