சினிமா என்றாலே முதலில் நம் கண் முன்னே பிரதிபலிக்கும் கதநாகயன் கதாநாயகிக்குதான் நாம் முதலிடம் கொடுத்து வருகிறோம். அடுத்த படியாக தான் இயக்குனர், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பலர் ஞாபகம் வருகிறது.

ஆனால் இவர்களையும் தாண்டி, வேலை பார்க்கும் லைட் மேன், மேக்கப், செட் டிசைனர், காஸ்டியும், டப்பிங் என பல பிரிவுகள் உள்ளதை பெரும்பாலும் யாருமே கண்டு கொள்வதில்லை.

அதிலும் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்துவிட்டால் பலர் நாம் தான் முன்னணி ஹீரோ, ஹீரோயின் என்கிற நினைப்பில் பலருக்கு மரியாதையை கூட கொடுப்பதில்லை என்பது சினிமா வட்டாரத்தில் பரவலாக கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெங்கடேஷ் குமார் என்பவர் லைட்மேன் குறித்து ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து வருகிறார்.

அதில் ஒரு லைட்மேன் கூறுகையில் ‘எங்களை மிகவும் மதிப்பது, கமல், அஜித், பிரபு, நெப்போலியன் ஆகியோர் தான்.

அனைத்து ஹீரோக்களும் எங்களுடன் நன்றாக தான் பேசுவார்கள் , ஆனால், குறிப்பிட்டு ஒருவரை சொல்கிறேன் என்றார் அவர்கள் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல்.

கமல் சார் எப்போதும் எங்களிடம் “நானும் உங்களை போல் ஒரு டெக்னிஷியன் தான், எனக்கு வணக்கம் சொல்ல வேண்டாம்” என்பார். அதேபோல் நடிகர் அஜித் எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார்’ என அந்த லைட்மேன் கூறியுள்ளார்.