அரசியலில் நிலவி வரும் குழப்பமான சூழ்நிலை குறித்து, அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலம் உடனுக்குடன் கூறிவருகிறார் நடிகர் கமல்.
இந்நிலையில் ஏற்கனவே தான் ஓபிஎஸ் யை ஆதரிப்பதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின் இடைப்பட்ட காலத்தில் அவர் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்ததாகவும் பாராட்டினார். அவர் தன்னுடைய நண்பர் இல்லை என்றாலும் அவரை ஆதரிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில் இவருடைய கருத்துக்கள் அனைத்தும் சசிகலாவிற்கு எதிர்பானதாகவே இருந்து வந்த நிலையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் நேரடியாகவே சசிகலா முதலமைச்சர் பதவிக்கு வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என மூஞ்சில் அடித்தது போல் கமல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர் எங்களுக்கு எது நல்லதோ அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார். அதனால் சசிகலா முதலமைச்சர் ஆவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றார். மேலும் தற்போதிருக்கும் சூழ்நிலையில் சசிகலா எதார்த்தமாக முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் அது தன்னை மட்டும் அல்ல அவரை ஆதரிக்காத பலரையும் காயப்படுத்தும் என்றார்.
அதே போல் சசிகளவிற்கு ஆதரவு இருந்தாலும், மக்கள் மனதில் என்ன எண்ணம் உள்ளது என்பதை அறிந்து விலகி செல்லாதவரால் எப்படி இந்த தேசத்தை வழிநடத்த முடியும் என்றும் , இப்படியான கருத்துக்களை தான் ஒரு தமிழனாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.
