இதனால், ரஜினி - அஜித் - விஜய் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பார்க்க மாட்டோமா?... அந்த அபூர்வம் நிகழாதா?.. என்ற எதிர்பாரப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.  அவர்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், ஒரு அபூர்வமான நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இதனை சாத்தியப்படுத்தியிருப்பது உலகநாயகன் கமல்ஹாசன்தான். அவரது 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் நிகழ்வில்தான் இம்மூவரும் பங்கேற்கின்றனர். 

சென்னையில் வரும் நவம்பர் 17ம் தேதி, கமல்ஹாசனின் 60 ஆண்டு கலைப்பயணத்தினை கொண்டாடும் வகையில், இசைஞானி இளையராஜாவின் மிகபிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழச்சியில், 44 ஆண்டுகாலம் கமல்ஹாசனுடன் இணைந்து பயணித்த அவரது நெருங்கிய நண்பரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, 'தல' அஜித், 'தளபதி' விஜய் ஆகியோரும் 'கமல்-60' நிகழ்ச்சியில் பங்கேற்பது தெரியவந்துள்ளது. ஆம், 'கமல்-60' நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 

அதில், கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவரது சிறந்த கதாபாத்திரங்களுடன், இளையராஜா, ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் தனித்தனியே இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் இருக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்தான் தற்போது, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்ந்த கமல்ஹாசனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் தரப்பு அழைப்பு விடுத்ததாகவும், அதனை ஏற்று, ரஜினி, அஜித், விஜய் ஆகியோர்  சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 கமல் என்ற மாபெரும் கலைஞனை கவுரவிப்பதற்காக இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றும் 'கமல்-60' நிகழ்ச்சியில், ரஜினி, அஜித், விஜய்யும் ஒன்றாக பங்கேற்பது  ரசிகர்களுக்கான கொண்டாட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.