தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், தமிழ் சினிமாவிற்குள் வந்து சாதித்தவர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவரின் எளிமையையும், உண்மையையும் பார்த்து நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே தான் போகிறது.

இவருடைய ரசிகர்கள் பலத்தை பற்றி அறியாத பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான கமால் கான், அஜித் பற்றி ட்விட்டரில் விமர்ச்சித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள ட்விட்டரில்.

பாலிவுட் சினிமாவில் அப்பா வேடங்களில் நடிப்பவர் போல் இருக்கும் அஜித்தை எப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் விவேகம் படத்துக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். இவருடைய இந்த விமர்சனத்தை கண்டு பல அஜித் ரசிகர்கள் அவரை திட்டி "ட்விட்" போட்டு வருகின்றனர். 

மேலும் பாலிவுட் திரையுலகத்தை சேர்ந்த இவர் அஜித்தை பற்றி இது போன்ற ட்விட் போட்டாலும், அங்கும் பல அஜித் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.