காளி வெங்கட் கதாநாயகனாக நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கி உள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஷெலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சுவாரஸ்யமும் சந்தோஷமும் எங்கே இருக்கிறது? என்ற கேள்வியை இந்த படம் முன்வைக்கிறது. சாதாரண மனிதனின் கதையை பிரதிபலிக்கும் வகையில் எதார்த்தமான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்தப் படம் வருகிற ஜூன் 6-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே ஆனந்தும், இசையை கே.சி பாலசங்கரனும், படத்தொகுப்பை சதீஷ்குமாரும், கலை வடிவத்தை ஜாக்கியும் மேற்கொண்டுள்ளனர்.

Madras Matinee - Official Trailer | Kaali Venkat | Roshni Haripriyan | Karthikeyan Mani