தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் காளி வெங்கட், இவரது தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார்.

கோவில்பட்டி அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் வெங்கட். இவர் சினிமா ஆசையில் கடந்த 1997-ம் ஆண்டு சென்னைக்கு வந்திருக்கிறார். இங்கு வியாபாரம் செய்து வந்த வெங்கட்டுக்கு இயக்குனர் விஜய் பிரபாகரனிடம் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரது தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் இருந்து சினிமாவை கற்றுக் கொண்டார் வெங்கட். பின்னர் ‘தசையினை தீ சுடினும்’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வெங்கட், அதில் விஜய் பிரபாகரன் உடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் அதில் தான் நடித்த காளி என்கிற கதாபாத்திரத்தின் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டார். அப்போதிலும் காளி வெங்கட் என அழைக்கப்பட்டு வரும் இவருக்கு அடையாளம் கிடைத்தது நாளைய இயக்குனர் என்கிற நிகழ்ச்சி மூலம் தான். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர்கள் இயக்கிய படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக அதில் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி எனும் குறும்படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பு கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்குமா? முதல் நாள் கணிப்பு!

இதையடுத்து முண்டாசுப்பட்டி என்கிற பெயரில் ராம்குமார் படம் இயக்கியபோது அதில் காமெடியனாக நடித்தார் காளி வெங்கட். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தெகிடி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும் அதில் தன்னுடைய நூறு சதவீத நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் வாங்கிவிடுவார் காளி வெங்கட். கடந்த ஆண்டு இவர் நடித்த லப்பர் பந்து திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

சினிமாவில் டஜன் கணக்கிலான படங்களில் தற்போது நடித்து வருகிறார் காளி வெங்கட். இந்நிலையில், அவரின் தாயார் விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72. இன்று மதியம் காளி வெங்கட் தாயாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் வைத்து நடைபெற உள்ளது. தாயின் மறைவால் சோகத்தில் மூழ்கி உள்ள நடிகர் காளி வெங்கட்டுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Ajith Upset : விடாமுயற்சி ரிலீஸ்; கடும் அப்செட்டில் அஜித் குமார் - காரணம் என்ன?