இயக்குனர் சற்குணம் இயக்கத்தில்,  விமல் - ஓவியா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு,  வெளியான திரைப்படம் களவாணி.  

இந்தப் படத்தின் மூலம் தான் நடிகை ஓவியா,  தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  கிராமத்து பின்னணியில்,  காதலை மையமாக வைத்து காமெடி களத்தில் உருவான, இந்தப் படம் ரசிகர்களில் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக...  சரண்யா பொன்வண்ணன்,  கஞ்சா கருப்பு,  இளவரசு ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில்,  தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.  ஏற்கனவே  படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது,  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  'களவாணி 2 ' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி 'களவாணி 2 ' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

இதில் நடிகர் விமல் மற்றும் ஓவியா ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.  முதல் பாகம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் அரசியலில் குதிக்கிறார் விமல்.  இதனை காமெடியாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சற்குணம். 
மேலும் மே மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பதையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் இதோ: