kalakalppu movie not relese in pongal

வருகிற பொங்கலன்று வெளியாகவிருந்த கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சியின் திரைப்பட வாழ்க்கையில் 25வது படமாக வெளிவந்த கலகலப்பு, கடந்த 2012 ம் ஆண்டு திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவான இத்திரைப்படம் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆனது.



கலகலப்பு வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார் சுந்தர் சி. அதன்படி இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா மட்டும் நடித்துள்ளார். மற்றபடி ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ரானி, ரோபோ ஷங்கர், வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படம் பொங்கலன்று ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று விக்ரமின் "ஸ்கெட்ச்", சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்", பிரபுதேவாவின் "குலேபகாவலி" போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதால் கலகலப்பு 2 விற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.