இலக்கியம் மற்றும் கலைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும்,  தமிழக அரசின் கலைமாமணி விருதுப் பட்டியல் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அறிவிக்கப்படாமல் இருந்த இந்த விருதை அறிவிக்கக்கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவ்வப்போது முதலமைச்சரைச் சந்திக்கும்போது வலியுறுத்தி வந்த வந்ததன் விளைவாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை நேற்றைய தினம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.