kala film 2nd look published by dhanush

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக காலா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் மருமகன் தனுஷின் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘காலா.

மும்பையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வயதான தோற்றத்தில், தாதா போன்று காட்சியளிக்கும் அந்தப் போஸ்டரில் கரிகாலன் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், தமிழர் ஒருவரின் நிஜக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் பரவியது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி படத்தின் இரண்டாவது போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.

இதே போன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை தனுஷ்ம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.