இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'காக்க முட்டை'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இளம் வயதிலேயே, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் மகன்களாக, விக்னேஷ், ரமேஷ் என்று இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகினர். இது திரைப்படம் என்பதை மறந்து மிகவும் எதார்த்தமாக இவர்கள் வெளிப்படுத்திய நடிப்பு நடிகர்கள் மனதை கவர்ந்தது. இதுவே இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

'காக்கா முட்டை படத்தில், 15 வயது குழந்தை நட்சத்திரமாக நடித்த, பெரிய காக்க முட்டை விக்னேஷ், தற்போது 21 வயது இளைஞனாக மாறியுள்ளார். இவரின் தற்போதைய புகைப்படம்  வெளியாகி, ஐஸ்வர்யா ராஜேஷின் ரீல் மகனா இவர் என ஆச்சர்யமாக பார்க்க வைத்துள்ளது. இதற்கு காரணம் இவரிடம் ஏற்பட்டுள்ள ஏகப்பட்ட மாற்றம் தான்.

எனவே விரைவில், இவர்.... ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மிகவும் குறைத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய லாபத்தை கொடுத்த 'காக்க முட்டை' படத்தை, பிரபல நடிகர் தனுஷும், இயக்குனர் வெற்றி மாறனும் இணைந்து தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'காக்கா முட்டை' விக்னேஷ் இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்து, சசிகுமார் தயாரித்திருந்த, 'அப்பா' படத்தில் சமுத்திர கனியின் மகனாக நடித்திருந்தார். ஒவ்வொரு அப்பாக்களும் தங்களுடைய மகனிடம் எப்படி நடந்த கொள்ள வேண்டும் என்று இந்த படத்தில் தெளிவாக கூறி இருந்தார் சமுத்திரக்கனி. 

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து, எந்த படங்களிலும் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்த விக்னேஷ் குழந்தை நட்சத்திரமாக வெற்றி பெற்றது போல்... ஹீரோவாக அறிமுகமானால் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் இதோ...