முன்னணி

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இதில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக தன்னை உயர்த்தி கொண்டார். கடைசியாக இவர் தமிழில் இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்துடன் நடித்து விட்டார். 

உச்சம்

மேலும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்.ஆனால் அவரது தங்கை நிஷா அகர்வாலோ திருமணம் ஆகி கணவர் குழந்தை என் செட்டிலாகி விட்டார்.

காதல்

இந்நிலையில் காஜல் மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின.ஆனால் காஜல் திகணக்கு சினிமாவில் இன்னும் மார்க்கெட் இருப்பதாக கூறி இப்போதைக்கு திருமணம் இல்லை என்று கூறினார்.

டேட்டிங்

தற்போது இவர் இளம் ஹீரோ ஒருவருடன் டேட்டிங் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து தகவல் கூறியதாவது எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேச மாட்டேன்.நான் யாருடனும் டேட்டிங் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.