தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், கார்த்தி, விஷால் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2-வில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அழகு பதுமை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் "ஏமாய்ன்தி ஈ வேலா" என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

தமிழில் "இஷ்டம்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட அந்த படம் படுதோல்வியைத் தழுவியது. அப்படத்தில் விமலுடன் சேர்ந்து, நிஷா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனையடுத்து பட வாய்ப்புகள் பெரிதாக கை கொடுக்காததால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு இஷான் என்ற மகன் உள்ளார். பெரியம்மாவின் செல்லமான இஷான் உடன் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

சகோதரிகளாக மட்டும் இல்லாமல், நல்ல தோழிகளாகவும் பழகி வரும் இருவரும் பார்ட்டி, ஷாப்பிங், சினிமா என எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வது வழக்கம். தற்போது காஜல் அகர்வாலுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வரும் நிலையில், இடைப்பட்ட நேரத்தை என்ஜாய் செய்வதற்காக அக்கா, தங்கை இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு அக்கா, தங்கை இருவரும் பிகினியில் எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் கடற்கரை, நீச்சல் குளம் என அனைத்து இடங்களிலும் தங்கை நிஷா அகர்வாலுடன் ஆட்டம் போட்டுள்ள காஜல், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். க்யூட் எக்ஸ்பிரஷன்களில் அகர்வால் சிஸ்டர்ஸ் எடுத்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.