கங்கனா ரணாவத் நடித்த பாலிவுட் திரைப்படமான 'குயின்' வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக கங்கனா சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தற்போது இந்தப்படம் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம்,  ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் மனு குமரன் என்பவர் தயாரித்து வருகிறார். தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்ற பெயரிலும் தெலுங்கில், 'தட்ஸ் மகாலட்சுமி' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'பட்டர்பிளை' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஜாம் ஜாம்' என்ற பெயரிலும் படத்துக்கு பெயரிட்டுள்ளனர்.

தமிழ், மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழி படங்களை, பிரபல நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.  தமிழில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.

யூடியூபில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. தற்போது இந்த படத்தின் டீசர் 7.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.  பெண் கதாப்பாத்திரைத்தை முதன்மையாகக் கொண்டு உருவான நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற யூடியூப்பில் சாதனை படைத்தது.

தற்போது 7.2  பார்வையாளர்களை பெற்று, இந்த சாதனையை முறியடித்துள்ளது காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்'  திரைப்படம். இதனால் படக்குழுவினர் படு உற்சாகத்தில் உள்ளனர்.