kajal agarwal get ishwarya rai movie

நடிகை காஜல் அகர்வால் முன்பெல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படத்தில் மட்டுமே நடித்து வந்தாரே தவிர, அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதா என்பதைப் பார்க்கவில்லை.

ஆனால் விவேகம் படத்தில் அவருடைய கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப் பட்டதால். இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார்.

அதன் படி தற்போது பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வெளியாகி தேசிய விருதைப் பெற்ற 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் பி. வாசு நடிகை ஐஸ்வர்யா ராயை வைத்து இயக்க இருந்த திரைப்படத்தில் தற்போது ஒரு சில காரணங்களால் ஐஸ்வர்யா ராய் அந்தப் படத்தை விட்டு விலக, இதில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் காஜல் அகர்வால். 

இதன் மூலம் தற்போது அனுஷ்கா, நயன்தாரா பாணியில் காஜலும் இணைந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்று தெரிகிறது.