காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை பற்றி கூறிய அவர், " என்னை சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள், இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. நேரம் வரும் போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன்.

தற்போது தமிழில் நடித்துள்ளார் 'பாரிஸ் பாரிஸ்' படத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் தயாராகி உள்ளது. சமீப காலமாக இளம் கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரோடு நடிக்கிறேன் என்பதைவிட என்ன மாதிரி பாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதே முக்கியம்.

நல்ல கதை கதாபாத்திரம் இருந்தால், எந்த நடிகர்களுடனும் நடிப்பேன். சமூக சேவைகளில் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தை செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள 'அரக்கு' என்ற பகுதிக்கு சென்றபோது...  அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதி படுவதை பார்த்தேன்.

இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறேன் என கூறியுள்ளார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.