Asianet News TamilAsianet News Tamil

’குண்டு வெடிப்பு நடந்த ஓட்டல்களில்தான் நான் வழக்கமாகத் தங்குவேன்’...நடிகை காஜல் அகர்வால் பகீர்...

’இலங்கை நான் மிகவும் விரும்பும் நாடு. சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கு சென்றிருந்த நான் குண்டு வெடிப்புக்கு ஆளான ஹோட்டல்களில் ஒன்றில்தான் தங்கியிருந்தேன். இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது’என்கிறார் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.

kajal agarval preys for srilanka
Author
Chennai, First Published Apr 23, 2019, 11:23 AM IST

 ’இலங்கை நான் மிகவும் விரும்பும் நாடு. சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கு சென்றிருந்த நான் குண்டு வெடிப்புக்கு ஆளான ஹோட்டல்களில் ஒன்றில்தான் தங்கியிருந்தேன். இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது’என்கிறார் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.kajal agarval preys for srilanka

இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 9 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 310க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது. kajal agarval preys for srilanka

உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பின் ஆழத்தைக்கூட என்னால் யூகிக்க இயலவில்லை. இறைவன் நம்முடன் இருப்பாராக. சில நாட்களுக்கு முன்னதாக நான் இலங்கையில் இருந்தேன். குண்டு வெடிப்பு நடந்த ஓட்டல்களில் ஒன்றில்தான் நான் தங்குவது வழக்கம்.  நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் எங்கும் இவ்வளவு வெறுப்பு? மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios