நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு, தன்னைப் பத்தி எப்படிப்பட்ட கிசுகிசு வந்தாலும் சிரிச்சுக்கிட்டே கடந்துபோயிடுவாங்க...இது நேற்றுவரை நடிகை காஜல் அகர்வால் பற்றிய கருத்து. ஆனால் கிசுகிசு எழுதும் நபர்கள்  இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருக்கிறது.

மேட்டர் இதுதான். ஷங்கரின் ‘இந்தியன் 2’ வில் காஜல் அகர்வால் கதைப்படி  கமலைவிட நுணுக்கமாக வர்மக்கலை தெரிந்தவராக வருகிறார். இதற்காக அவர் கேரளாவில் முகாமிட்டு முறைப்படி வர்மக்கலை கற்றுவருகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக சென்னையில் நடைபெற்று வருகின்றன.

இதில், காஜல் அகர்வால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவரும் ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

'இந்தியன்' படத்தில் வர்மக்கலை தெரிந்தவராக கமல் நடித்திருந்தார். அப்படம் வெளியானபோது பலரும் ஸ்டைலாக அதனைப் பின்பற்றி வந்தார்கள். தற்போது 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கதாபாத்திரத்துக்கு வர்மக்கலைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.