புதிய தெலுங்குப் படம் ஒன்றுக்கு நடிகை காஜல் அகர்வால் கொடுத்திருக்கும் ஆபாச முகபாவனையை, அவரது ‘பாரிஸ் பாரிஸ்’ பட சம்பவத்தோடு ஒப்பிட்டு, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பாரிஸ் பாரிஸ்’ பட ட்ரெயிலரில் சக நடிகை ஒருவர் காஜல் அகர்வாலின்  மார்பகத்தை அழுத்தும் காட்சியில் ஒரு ஷாக் எக்ஸ்பிரஷன் கொடுத்திருப்பார் அவர். வலைதளங்களில் வைரலான அந்தக் காட்சியை மக்கள் வெகுவாக ரசித்தபடியே, ‘அய்யய்யோ கலாச்சாரம் இப்படி நாறிப்போச்சே’ என்று கமெண்டுகள் அடித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படமான ‘சீதா’ படத்துக்கு கதாநாயகன் பெல்லம்கொண்ட சுரேஷுக்கு எதிரில் நிற்கும் போஸ் ஒன்றுக்கு சாட்சாத் அதே முகபாவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நாடித்துடிப்பை அதிகரித்திருக்கிறார் காஜல் அகர்வால்.  ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் காஜலின் அந்த புகைப் படத்துக்குக் கீழே ரசிகர்கள் வசைமாரி பொழிந்துகொண்டிருக்கிறார்கள்.