Asianet News TamilAsianet News Tamil

’கைதி’படத்தை விஜய் பார்த்துவிட்டாரா?’...இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்ன சொல்லுகிறார்?

’இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.அதே போல் இரண்டு படங்களையும் இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி  செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

kaithi director lokesh kanagaraj interview
Author
Chennai, First Published Oct 26, 2019, 12:02 PM IST

’மாநகரம்’படத்தைத் தொடர்ந்து ‘கைதி’ படம் மூலமும் சூப்பர் ஹிட் அடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று பிரசாத் லேப்பில் காலை 10 மணிக்கு நடந்த பத்திரிகையாளர் காட்சிக்கு ஆஜராகி அனைவருடனும் மிகவும் சகஜமாக உரையாடினார். ‘கைதி’படத்துடன் ரிலீஸ் ஆகியிருக்கும் ‘பிகில்’படம் குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க கொஞ்சம் தயக்கம் காட்டிய அவர் ‘கைதி’பட உருவாக்கம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். என்கிற ஒரே படம் வழியாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.kaithi director lokesh kanagaraj interview

“ எனது மாநகரம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். ’கைதி’ முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன்” எனது தொடங்கிய அவரிடம் முதல் கேள்வியாக இந்தப்படத்தில் ஏன் ஹிரோயின் இல்லை ? என்று கேட்டபோது,’இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.அதே போல் இரண்டு படங்களையும் இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி  செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை. ஹிரோயின் இல்லை எனும் போது அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும்.  இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல  இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது .உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான்இந்தப்படமே  உருவானது.இந்தக்கதையை சொன்னவுடனே கார்த்தி ஒத்துக்கொண்டார். அவர் ஹிரோயின் இல்லை காமெடி இல்லை என எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது.kaithi director lokesh kanagaraj interview

இந்தப்படம் ஹாலிவுட் படமான ‘டை ஹார்ட்’ கமலின் ‘விருமாண்டி’ஆகிய இரு படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டதுதான் என்று சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

நான் அடுத்து இயக்கிவரும் ‘தளபதி 64’படம் குறித்து இப்போதைக்கு எதுவுமே சொல்லமுடியாது. அதே போல் விஜய்க்கு கைதி படத்தைப் போட்டுக்காட்டினீர்களா என்று என்னைச் சந்திக்கிற எல்லோருமே கேட்கிறார்கள். அவர் இதுவரை பார்க்கவில்லை. மிக விரைவில் அவருக்கு படத்தைப் போட்டுக்காட்டுவோம்’என்கிறார் லோகேஷ் கனகராஜ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios