Asianet News TamilAsianet News Tamil

திரையரங்கில் விற்பனைக்கு வந்த இளநீர்...! 'கடைக்குட்டி சிங்கத்தால்' ஏற்பட்ட மாற்றம்...!

kadaikutty singam reflexion sale tender coconut in theatres
kadaikutty singam reflexion sale tender coconut in theatres
Author
First Published Jul 22, 2018, 6:24 PM IST


சிங்கம்'. இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையிலும், விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்து கூறும் வகையில் எடுக்கப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் கார்த்தி, ஒரு விவசாயியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், விஜி சந்திர சேகர், சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், சூரி, உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். kadaikutty singam reflexion sale tender coconut in theatres

தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது 

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் எதிரொலியாக "திருநெல்வேலியில் உள்ள பிரபல ராம் முத்துராம் திரையரங்கில் இளநீர் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.kadaikutty singam reflexion sale tender coconut in theatres

இது குறித்து திரையரங்க நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !! 
விவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.  

ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !!
விவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி 😊@Karthi_Offl @Suriya_offl @pandiraj_dir @2D_ENTPVTLTD pic.twitter.com/IubVKGdsQY

— Ram Muthuram Cinemas (@RamCinemas) July 22, 2018

 

இந்த திரையரங்கம் போல, மற்ற திரையரங்கத்திலும் இதே போன்று இளநீர் விற்பனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios