Asianet News TamilAsianet News Tamil

“ எல்லா புகழும் இறைவனுக்கே “ கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலை பின்பற்றிய சூர்யா...!

kadaikutty singam movie success meet
kadaikutty singam movie success meet
Author
First Published Jul 25, 2018, 11:54 AM IST


கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ்  , பொன்வண்ணன் , சரவணன் , சூரி ,இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் பலர் கலந்து கொண்டனர்.

kadaikutty singam movie success meet

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா :- “ எல்லா புகழும் இறைவனுக்கே “ என கூறி ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் தன்னுடைய பேச்சை துவங்கினார். பின் இந்த படத்தின் இயக்குனர் பற்றி பேசிய சூர்யா  இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது. இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களை தான் எடுப்போம் என்றார் சூர்யா.

kadaikutty singam movie success meet

விழாவில் கார்த்தி பேசியது :- நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும். திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது. நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வைட் சுகரை எப்படி நிறுத்துவது , நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் எடுத்து வருவது என்பதை பற்றி  ( தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது ) , எப்படி நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றி இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்றார் கார்த்தி.

kadaikutty singam movie success meet

நடிகர் சத்யராஜ் பேசியது :- இந்த படத்தை  முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும் , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை  முதலில் போட்டு காட்ட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுள்ளது என கூறினார்.

kadaikutty singam movie success meet

மேலும் நிகழ்ச்சியின் முடிவில், தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார். மிரளும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios