Kaala will speak about the life of oppressed Tamils - P. Irinjith

ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு காலா கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 மற்றும் காலா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததால் ரஜினிகாந்த் ஓய்வில் இருக்கிறார். துபாயில் நடக்கும் 2.0 இசை வெளியீட்டு விழாவுக்கு குடும்பத்துடன் பறந்துள்ளார்.

இந்த இரு படங்களின் போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது.

காலா படம் அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வலுவான அரசியல் இடம் பெற்றுள்ளதாக இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு காலா கதை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

காலா படம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்பதும் கொசுறு தகவல்.