kaala movie release date announced

2.ஒ

பிரம்மாண்டத்துக்கு பெயர் போன ஷங்கர் இயக்கியுள்ள படம் ”2.ஒ”. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இரண்டாம் பாகம்

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தை ஹாலிவுட் பாணியில் எடுக்கிறார் ஷங்கர்.இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிகமான தொகையில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதல் திரைப்படம்

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் 2.ஒ. காரணம் பெரும் பொருள் செலவில் இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான்.தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது.

இசை வெளியீட்டு விழா

மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக 2 பாடல்கள் வெளியிடப்பட்டன. அப்பாடல்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

கிராஃபிக்ஸ்

இந்நிலையில் ஜனவரி மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்த 2.ஒ படம் கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் வரும் ஏப்ரலில் வெளியாவதாக கூறப்பட்டது.படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 15

ஆனாலும் திட்டமிட்டப்படி வேலைகள் முடியாத காரணத்தால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய முடியாது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலா 

இது இப்படி இருக்க பா.ரஞ்சித்துடன் கபாலி படத்துக்கு பிறகு இரண்டாவதாக நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ள படம் காலா.இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளதாம். இதனால் இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.ஒ படத்திற்கு பிறகு காலா திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.