kaala movie latest news
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு வெளியான கபாலி திரைப்படம் உள்ளக அளவில் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.
மேலும் இன்று 10 மணிக்கு இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியானது. இதில் இந்த விஷயங்களை நீங்கள் கவனித்தீர்களா...? மேலும் இந்த பெயர் குறித்து சிறப்பு தகவல்கள்.
காலா என்றால் எமன் என்கிற பொருள் உண்டு, அதே போல
ரஜினிகாந்தின் தளபதி படத்தில் டைட்டில் டிசைன் போலவே இந்த படத்தின் டைட்டில் டிசைன் உள்ளது.
மேலும் காலா மட்டுமின்றி கரிகாலன் என்ற வார்த்தையும் இணைக்கப்பட்டுள்ளது, ரஜினி மக்களுக்காக போராடுவது போல் தான் கதை இருக்கும் என தெரிகின்றது. கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா, இந்த பெயர் ரஜினிக்கு பிடிக்கும் என்பதால் இதை வைத்துள்ளார்களாம்.
டைட்டில் சிவப்பு கலரில் இருப்பது கம்னியூஸ்ட்டை குறிப்பது போல் உள்ளது கிசுகிசுக்கப்படுகின்றது. ’காலா’ என்பது எமனையும் குறிக்கும்.
