இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், உள்ளிட்ட பலர் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'காலா'. அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து எப்படியும் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் 14 காட்சிகளை கட் செய்துவிட்டு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் வெளியான ரஜினியின் படங்களில் அதிகம் கட் செய்யப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. 

கோலிவுட் திரையுலகினர் ஸ்ரைக் முடிவிற்கு வந்ததும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்படிருந்தது. மேலும் ஏற்க்கனவே 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.