kaala create rocord for america

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பெருவாரியான வசூலை அள்ளுவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் சென்னையில் முதல் நாள் மட்டும் ரூ.1.74 கோடி வசூலை பெற்றதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது 'காலா' திரைப்படம் அமெரிக்காவிலும் வசூல் சாதனை செய்துள்ளது. 'காலா' திரைப்படம் மூன்றே நாட்களில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' , 'லிங்கா' மற்றும் 'கபாலி' ஆகிய படங்கள் மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருந்த நிலையில் தற்போது 'காலா' படத்தையும் சேர்த்து ரஜினி நடித்த நான்கு படங்களும் மில்லியன் டாலர் வசூல் செய்த படங்களாக இருக்கிறது.

ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தாக கூறி பலர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்த்த நிலையில், தற்போது அனைத்தையும் மீறி படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.