KAALA COMES CLOSER TO RELEASE! INTERESTING About Action Black

தமிழ் சினிமாவில் ‘நேச்சுரல் ஸ்டண்ட்ஸ்’ எனப்படும் யதார்த்த சண்டை காட்சிகளை கொண்டாடுபவர் இயக்குநர் பாலதான். நான் கடவுள் , பிதாமகன் உள்ளிட்ட அவரது பிளாக்ஸ்பஸ்டர் படங்களின் ஹாட் ஹைலைட்ஸே இந்த யதார்த்த சண்டைகள்தான். வானத்தில் பறந்து பறந்து அடிப்பது, ஒரே அடியில் பத்து பேரை சாய்ப்பது போன்ற அபத்த ஆக்‌ஷன்களை வேறு வழியில்லாமல் ரசித்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு இந்த யதார்த்த சண்டைக்காட்சிகள் வித்யாச ரசனையை விரித்தன. 

ஆனால் மாஸ் ஹீரோக்கள் இந்த யதார்த்த சண்டை கான்செப்டுக்குள் வராமலே காலத்தை கடத்தினர். காரணம் இதில் ஹீரோயிஸத்துக்கு வாய்ப்பிருக்காது மேலும் ஹீரோவும் அடிபட வேண்டும். அதனால்தான் ஜெயம்ரவி, விஷால் போன்ற ஹீரோக்கள் கூட இந்த நேச்சுரல் ஃபைட்ஸ் சிஸ்டத்தை அவாய்டு செய்து வந்தனர். 

இந்நிலையில் முதன் முதலால ரஜினிகாந்த் இந்த நேச்சுரல் வெரைட்டி சண்டை முறைக்குள் காலெடுத்து வைத்திருக்கிறார். ரஜினியா இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்? என்று டவுட் ஆகுபவர்கள் உங்களை கிள்ளிப் பார்த்துக் கொண்டு இது நிஜம்தான் என்று உணருங்கள். 

ரஜினிகாந்த் முறைத்துப் பார்த்தாலே அடியாட்கள் அந்தரத்தில் பார்சலாகி அடுத்த ஊரில் போய் விழுவதைத்தான் இத்தனை காலமமாக அவரது ரசிகன் ரசித்திருக்கிறான். ஆனால் முதன் முதலாக தனது ’காலா’ படத்தில் இந்த மிகைப்படுத்தப்பட்ட சண்டைக்காட்சிகளுக்கு விடை கொடுத்துவிட்டு யதார்த்த சண்டை கான்செப்டுக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். 

சென்னை அருகே ஈ.வி.பி. ஸ்டுடியோஸில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மும்பை தாராவி செட்டில்தான் தலைவர் இப்படி எதிரிகளை யதார்த்த ஆக்‌ஷனில் அந்தர் செய்யும் சீன்கள் சுடச்சுட ஷூட் ஆகியிருக்கின்றனவாம். 

ரஜினியின் ஸ்டைலுக்கு யதார்த்த சண்டைக்காட்சிகள் செட் ஆகுமா? என்ற கேள்விக்கு ‘செமத்தியாக செட் ஆகியிருக்கிறது. கதைக்கு இந்த மாதிரியான ஆக்‌ஷன் தான் தேவைப்பட்டது. அதை என்னிடம் சொல்லிய இயக்குநர், தலைவரிடம் (ரஜினி) சொல்லி டபுள் ஓ.கே. வாங்கிவிட்டார். சூப்பர் ஸ்டாருக்கு இது புது மாதிரியான ஆக்‌ஷன் ஜானர்.

ஒவ்வொரு நாளும் அதை ரசித்து ரசித்து செய்திருக்கிறார். டேக் ஓ.கே. ஆனதும் அதை மானிட்டரில் பார்த்துவிட்டு ‘வாவ்!’ என்று தலைவர் பூரிக்கும்போது நம்ம மனசு ஜிவ்வ்வ்!ன்னு அந்தரத்துல பறக்குது.” என்று இந்த ரகசியத்தை உடைத்து, உறுதிப்படுத்தி சொல்லியிருக்கிறார் காலா படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன். 

யதார்த்த சண்டை காட்சிகளுக்காக வர்மபு மீறாத, கற்பனையற்ற ஸ்பெஷல் ஸ்டைலை ஆக்‌ஷனில் காட்டியிருக்கிறாராம் ரஜினி. இது அவரது ரசிகர்களுக்கு ரொம்பப் புது அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். 
பின்னுங்க தல!